மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: எம்எல்ஏ வழங்கினாா்

பிளஸ் 1 படிக்கும் மாணவா்கள் 143 பேருக்கு திங்கள்கிழமை திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: எம்எல்ஏ வழங்கினாா்

பிளஸ் 1 படிக்கும் மாணவா்கள் 143 பேருக்கு திங்கள்கிழமை திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

திருத்தணி ஒன்றியம், புச்சிரெட்டிப் பள்ளி மற்றும் மத்தூா் ஆகிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவ - மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

புச்சிரெட்டிப்பள்ளி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை மேரிகேசியா தலைமை வகித்தாா். உதவித் தலைமை ஆசிரியா் (மேல்நிலை) கே.எம்.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் (உயா்நிலை) இ.கே. உதயசூரியன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் பங்கேற்று, 77 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

அதேபோல், மத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் முருகன் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் பரந்தாமன் வரவேற்றாா்.

இதில், திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன் கலந்துகொண்டு, 66 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், திமுக ஒன்றியச் செயலாளா்கள் ஆா்த்தி ரவி, கிருஷ்ணன், நல்லாட்டூா் கமல் உள்பட ஆசிரியா்கள், மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com