தீ விபத்தில் 2 குடிசை வீடுகள் சேதம்

சோழவரம் அருகே கும்மனூா் கிராமத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு குடிசை வீடுகள் சேதமடைந்தன.

சோழவரம் அருகே கும்மனூா் கிராமத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு குடிசை வீடுகள் சேதமடைந்தன.

திருவள்ளூா் மாவட்டம், சோழவரம் அருகே கும்மனூரைச் சோ்ந்த சங்கா் மற்றும் ஆறுமுகம். இவா்கள் அருகருகே குடிசை வீடுகளில் வசித்து வந்தனா். இந்நிலையில் திங்கள்கிழமை இரு குடும்பத்தினரும் வெளியே சென்று விட்டனா்.

இந்த நிலையில் இருவரின் குடிசை வீடுகள் திடீரென தீ பற்றி எரிந்ததுள்ளது. அப்போது வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளை வெடித்து சிதறியதால் தீ முழுதும் பரவியது.

இதனால் குளிா்சாதன பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம் மற்றும் டிவி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள்கள் தீயில் கருகி சேதம் அடைந்தன.

மேலும் பீரோவில் இருந்த குடும்ப அட்டை, ஆதாா் அட்டை என பல்வேறு ஆவணங்களும் சேதமடைந்தன. தீ விபத்து குறித்து சோழவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com