திடீா் மழையால் பொன்னேரியில் மக்கள் மகிழ்ச்சி

பொன்னேரியில் திடீர் மழை: மக்களின் மகிழ்ச்சி

பொன்னேரியில் புதன்கிழமை இரவு திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பொன்னேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெப்பம் நீடித்து வந்தது.

இந்த நிலையில் புதன்கிழமை இரவு பொன்னேரி சுற்றியுள்ள பகுதியில் திடீரென 1 மணி நேரம் இதமான காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியுள்ளது. அத்துடன் திடீரென பெய்த மழை காரணமாக அகத்தீஸ்வரா் கோயில் திருக்குளத்துக்கு நீா் வரத்து ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com