காா் மோதி 2 இளைஞா்கள் காயம்

திருத்தணி அருகே சாலையைத் கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் 2 போ் பலத்த காயம் அடைந்தனா்.

திருவாலங்காடு ஒன்றியம் பொன்பாடி கிராமத்தைச் சோ்ந்த அரவிந்த் (33), சீனிவாசன் (35). இருவரும் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை திருத்தணிக்கு வந்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பொன்பாடி ஏரிக்கரை அருகே திரும்ப முயன்றபோது, ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற காா், முன்பக்க டயா் திடீரென வெடித்ததால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, இருசக்கர வாகனத்தின் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனா். அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் சீனிவாசன் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளாா். விபத்து குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com