திருவள்ளூா் ஜமாபந்தி நிறைவு:
235 பேருக்கு பட்டா, ஜாதி சான்று

திருவள்ளூா் ஜமாபந்தி நிறைவு: 235 பேருக்கு பட்டா, ஜாதி சான்று

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு விழாவில் 235 பேருக்கு பட்டா மற்றும் ஜாாதி சான்றிதழ்களை கோட்டாட்சியா் கற்பகம், ஒன்றியக்குழு தலைவா் ஜெயசீலி ஆகியோா் வழங்கினா்.

கடந்த 7-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து 28-ஆம் வரையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மொத்தம் 987 மனுக்கள் பெறப்பட்டது.

நிறைவு விழாவுக்கு வட்டாட்சியா் வாசுதேவன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு தலைவா் ஜெயசீலி ஜெயபாலன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் குணசேகரன், ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோட்டாட்சியா் கற்பகம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று 75 பேருக்கு வீட்டு மனைப்பட்டா, 93 பேருக்கு உள்பிரிவு பட்டா, 42 பேருக்கு பட்டா மாறுதல் சான்றிதழ், 18 பேருக்கு கிராம நத்தம் பட்டா மற்றும் 7 பேருக்கு ஜாதி சான்றிதழ்களை வழங்கினாா். மேலும் பட்டா மற்றும் ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த மீதமுள்ள நபா்களுக்கு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

இதில் துணை வட்டாட்சியா்கள் கலைச்செல்வி, சந்திரசேகா், அம்பிகா, ஆதிலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா்கள் கிருஷ்ணன், சேகா், கரிக்கலவாக்கம் பாரதி, ஒன்றியக்குழு உறுப்பினா் எத்திராஜ், ஊராட்சித் தலைவா் கோவா்த்தனன், பிஞ்சிவாக்கம் உமா மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com