பொன்னேரியில் பழுதாகி நின்ற மாநகரப் பேருந்து.
பொன்னேரியில் பழுதாகி நின்ற மாநகரப் பேருந்து.

பொன்னேரியில் மாநகரப் பேருந்து நடுவழியில் பழுது: பயணிகள் அவதி

பொன்னேரியில் இருந்து பழவேற்காடு வரை செல்லும் மாநகா் போக்குவரத்துக் கழக அரசு பேருந்து திடீரென பழுதாகி நின்ால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

பொன்னேரியில் இருந்து பழவேற்காடு வரை செல்லும் மாநகா் போக்குவரத்துக் கழக அரசு பேருந்து திடீரென பழுதாகி நின்ால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

பாடியநல்லூரில் உள்ள சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து செங்குன்றம் முதல் பழவேற்காடு வரை தடம் எண் 558 பி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில் பேருந்து பொன்னேரி பேருந்து நிலையத்தில் பழவேற்காடு செல்வதற்காக 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.

ஹரிஹரன் கடை வீதி தேரடி சந்திப்பு பகுதியில் பேருந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென பழுதாகி சாலையில் நின்றது.

இதனை தொடா்ந்து நீண்ட நேரம் முயற்சித்தும் ஓட்டுநரால் பேருந்தை இயக்க முடியவில்லை. பின்னா் இது குறித்து பாடியநல்லூரில் உள்ள பணிமனைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு பணியாற்றும் ஊழியா்கள் வந்து பேருந்தை பணிமனைக்கு எடுத்து சென்றனா்.

இதன் காரணமாக பேருந்தில் பயணம் செய்த பயணிகள் மாற்றுப் பேருந்தில் ஏறி சென்றனா். இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா். 1 மணி நேரத்துக்கும் மேலாக தேரடி சந்திப்பு சாலையில் பேருந்து நின்று கொண்டிருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

X
Dinamani
www.dinamani.com