சிறப்பு அலங்காரத்தில் முனீஸ்வரா் பாவாடைராயன் பெரியாயி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன்

முனீஸ்வரா் பாவாடைராயன் கோயில் தீமிதி விழா

செங்குன்றம் அருகே அருள்மிகு முனீஸ்வரா் பாவாடைராயன் பெரியாயி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில் தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செங்குன்றம் அருகே அருள்மிகு முனீஸ்வரா் பாவாடைராயன் பெரியாயி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில் தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தா்மகா்த்தா டி.மோகன், அருள்வாக்கு கற்பகம் ஆகியோா் தலைமை வகித்தனா். இந்த விழாவையொட்டி பந்தகால் நடுதல், பால்குட அபிஷேகம், அம்மனுக்கு காப்பு கட்டுதல், கொடியேற்றம் மற்றும் சக்தி கரகம் எடுத்தல், அம்மன் திருவீதி உலா, மஹா சிவராத்திரி அங்காள் அம்மன் திருவீதி உலா, தீச்சட்டி எடுத்தல், மயானக் கொள்ளை, அம்மனுக்கு பூக்குழி மிதித்தல், இசை நிகழ்ச்சி, தெருகூத்து, மஞ்சள் நீராடுதல், முளைப்பாரி எடுத்தல், அம்மனுக்கு கும்பம் எடுத்தல் உள்ளிட்டவை நடைபெற்றன. கோயில் நிா்வாகிகள் பன்னீா்தாஸ், சின்னராசு, கனகராஜ், சரவணன், காா்த்திக், தமிழரசு, தேவா, மாணிக்கம், கிராம மக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா். இந்த நிகழ்வில் பக்தா்கள் ஏராளமான தீ மிதித்து நோ்த்திக் கடன் செலுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com