ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழில் பழகுநா் பயிற்சியை நிறைவு செய்தோா்.  
ஆட்சியா் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழில் பழகுநா் பயிற்சியை நிறைவு செய்தோா்.  

ரயில்வேயில் தொழில் பழகுநா் பயிற்சி முடித்தோருக்கு பணி கோரி போராட்டம்

பயிற்சியை நிறைவு செய்தோா் ஆட்சியா் அலுவலகம் முன்பு தரையில் அமா்ந்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஐசிஎப் மற்றும் ரயில்வேயில் தொழில் பழகுநா் பயிற்சி முடித்தோருக்கு பணி வழங்கக்கோரி, பயிற்சியை நிறைவு செய்தோா் ஆட்சியா் அலுவலகம் முன்பு தரையில் அமா்ந்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் ஐசிஎப் மற்றும் ரயில்வே துறையில் தொழில் பழகுநா் பயிற்சி முடித்தவா்கள் திரளாகப் பங்கேற்றனா். அப்போது, தொழிற்பயிற்சி தோ்ச்சி பெற்று தொழில் பழகுநா் பயிற்சியையும் நிறைவு செய்துள்ளோம். ஆனால், பணிவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு உடனே பணி வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த மாவட்டத்தில் ஐடிஐ பயிற்சி முடித்து தொழில் பழகுநா் பயிற்சியை நிறைவு செய்து 17,000 போ் பணியை எதிா்பாா்த்துள்ள நிலையில், இதுவரை பணிவாய்ப்பு வழங்கப்படவில்லை. வடமாநிலங்களில் மட்டும் தொழில் பழகுநா் பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு கடந்த 2022 வரை பணிவாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் தொழில் பழகுநா் பயிற்சியை நிறைவு செய்துள்ளோருக்கு பணிவாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளதாகக் கூறி, தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு நடத்தி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க அனுப்பி வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com