ஆவடியில் 300 பெண்களுக்கு நல உதவி

ஆவடி அருகே நடுகுத்தகை ஊராட்சியில் 300 பெண்களுக்கு நல உதவிகளை நாசர் எம்எல்ஏ புதன்கிழமை வழங்கினார்.

ஆவடி அருகே நடுகுத்தகை ஊராட்சி சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் மகளிர் தின விழா அப்துல் கலாம் பூங்காவில் புதன்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவர் கே.ஜெ.ரமேஷ் தலைமை வகித்தார். இதில் ஆவடி சட்டப்பேரவை உறுப்பினர் சா.மு.நாசர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 300 பெண்களுக்கு நல உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து அவர் முதியோர் பராமரிப்பு இல்லத்தில் 100 பேருக்கு உணவு மற்றும் குடைகள் வழங்கினார்.

மேலும், அங்கு தனியார் மருத்துவக் கல்லூரி சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் மருத்துவக் குழுவினர் பங்கேற்று 200-க்கு மேற்பட்ட மக்களுக்கு பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்து மருந்து, மாத்திரைகளை வழங்கினர். நிகழ்வில் திமுக மாவட்ட நிர்வாகிகள் ம.ராஜ் டி.தேசிங்கு, பா.நரேஷ்குமார் கே.சுரேஷ்குமார், மோகன், வினோத், ஒன்றியக் குழு உறுப்பினர் யமுனா ரமேஷ், ஊராட்சித் தலைவர் என்.லட்சுமி, துணைத் தலைவர் ஆர்.செந்தாமரை மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் நவமணி, சாந்தகுமார், சந்திரன் ஹரிபாபு, டி.ரமேஷ், ராதாகிருஷ்ணன், உதயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com