இரு பள்ளி மாணவிகள் தற்கொலை

ஆவடி, அம்பத்தூர் பகுதியில்  கைப்பேசியை பெற்றோர் பறித்து வைத்ததால் 2 பள்ளி மாணவிகள் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

ஆவடி அருகே திருமுல்லைவாயல் ஜே.பி நகர், இளங்கோ தெருவைச் சேர்ந்தவர் யோகநாதன். இவர் சென்னை அமைந்தகரையில் சிமெண்ட் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா. இவர்களது மகள் திவ்யா (15).

இவர் அதே பகுதி சத்தியமூர்த்தி நகரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் திவ்யா அடிக்கடி கைப்பேசியில் அதிக நேரம் செலவழித்து வந்துள்ளார். இதைப் பார்த்த பெற்றோர் அவரைக் கண்டித்து, கைப்பேசியைப் பறித்து வைத்துள்ளனர்.

இதனால் மனம் உடைந்த திவ்யா, செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து திருமுல்லைவாயல் போலீஸôர் சடலத்தை மீட்டு உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் உதவி ஆய்வாளர் பழனி தலைமையில் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை: அம்பத்தூர், சித்து ஒரகடம் பாரதி தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார். இவரது மனைவி சந்தியா. இவர்கள் இருவரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அலுவலராகப் பணியாற்றி வருகின்றனர். இவர்களது மகள் லக்ஷிதா (14). இவர் அம்பத்தூர், புதூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

லக்ஷிதா பள்ளி பாடங்களை சரியாக படிக்காமல், கைப்பேசியில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதை பெற்றோர் கண்டித்து, கைப்பேசியைப் பறித்து வைத்துக் கொண்டனராம். இதனால் லக்ஷிதா மனமுடைந்தார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு லக்ஷிதா வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

காவல் உதவி ஆய்வாளர் அபர்ணா தலைமையில் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com