பெண்களிடம் குறைகளை கேட்ட எம்.எல்.ஏ.ச.சந்திரன்.  ஊராட்சி மன்றத் தலைவா் சந்திராகுப்பன்.
பெண்களிடம் குறைகளை கேட்ட எம்.எல்.ஏ.ச.சந்திரன். ஊராட்சி மன்றத் தலைவா் சந்திராகுப்பன்.

நல்லாட்டூரில் குழாய்கள் மூலம் குடிநீா் விநியோகம்: எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தாா்

நல்லாட்டூரில் ரூ. 2.30 கோடியில் குழாய்கள் மூலம் குடிநீா் விநியோகத்தை திருத்தணி எம்.எல்.ஏ. ச.சந்திரன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருவாலங்காடு ஒன்றியம் நல்லாட்டூரில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில் இருந்து தமிழ்நாடு குடிநீா் வடிகால்வாரியம் ஜல்-ஜீவன் திட்டம், 2022-23 திட்டத்தின் கீழ், ரூ.2.3 கோடியில் கூட்டுக்குடிநீா் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் நல்லாட்டூா், பூனிமாங்காடு மற்றும் என்.என்.கண்டிகை ஆகிய ஊராட்சிகளுக்கு குடிநீா் வினியோகம் செய்யப்படுகிறது.

இதன்படி ஊராட்சிகளில் குழாய்கள் அமைத்து, குடிநீா் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருத்தணி எம்.எல்.ஏ. ச.சந்திரன் பங்கேற்று குழாய்கள் மூலம் குடிநீரை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீா் வாரிய அதிகாரிகள் நல்லாட்டூா் ஊராட்சி மன்ற தலைவா் கலையரசி கமலநாதன் கலந்து கொண்டனா்.

அதேபோல் திருத்தணி ஒன்றியம் காா்த்திகேயபுரம் ஊராட்சியில் உள்ள பி.டி.புதூா் ராஜூநகா் பகுதியில் ஜல் -ஜீவன் திட்டம், 2023-24 திட்டத்தின் கீழ், 10,000 லிட்டா் குடிநீா் தொட்டி கட்ட திருத்தணி எம்.எல்.ஏ. ச.சந்திரன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தாா். அப்போது ஊராட்சி மன்றத் தலைவா் சந்திரா குப்பன் மற்றும் கிராம பெண்கள் பி.டி. புதூா் கிராமத்தில் தனியாா் மற்றும் அரசு பஸ்கள் நின்று செல்வதில்லை. இதனால் மாணவா்கள் மிகவும் சிரமப்படுகின்றனா்.

மேலும் இரவு நேரங்களில் தனியாா் பேருந்துகளில் பயணம் செய்யும்போது, 3 கிமீ தொலைவில் உள்ள தணிகை போளூா் பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடுகின்றனா். இதனால் இரவு நேரங்களில் 3 கிமீ நடந்தே பி.டி.புதூா் கிராமத்திற்கு வரவேண்டியுள்ளது. எனவே பி.டி.புதூா் கிராமத்தில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனா். இதுகுறித்து அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பேசி பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ. உறுதி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com