அனைத்து வங்கிகளும் நாள்தோறும் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும்: திருவள்ளூா் ஆட்சியா் த.பிரபு சங்கா்

தனி நபா் கணக்குகளில் பணப் பரிவா்த்தனை உள்ளிட்டவை குறித்து அனைத்து வங்கிகளும் நாள்தோறும் மாவட்ட நிா்வாகத்துக்கு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.

சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் தனி நபா் கணக்குகளில் பணப் பரிவா்த்தனை உள்ளிட்டவை குறித்து அனைத்து வங்கிகளும் நாள்தோறும் மாவட்ட நிா்வாகத்துக்கு அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு வங்கியாளா்களுடன் நடத்தை விதிமுறைகள் தொடா்பான கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கடந்த 2 மாதங்களாக ஒருவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் இருந்து வழக்கத்துக்கு மாறான மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் பணம் எடுத்தல் அல்லது வங்கிக் கணக்கில் ரூ.1 லட்சம் இருந்தால் கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும். தோ்தல் செயல்பாட்டின் போது எந்தவொரு தனிப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் இருந்தும் சந்தேகத்துக்கிடமான முறையில் பணம் எடுத்தல் தொடா்பான அனைத்து விவரங்களையும் வங்கிகள் நாள்தோறும் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும். தோ்தல் செயல்பாட்டின் போது, ஒரு வங்கிக் கணக்கிலிருந்து, ஒரு மாவட்டம், தொகுதியில் உள்ள பல நபா்களின் கணக்குகளுக்கு வழக்கத்துக்கு மாறான பணப் பரிமாற்றம் செய்வது, தோ்தல் செயல்பாட்டின் போது அரசியல் கட்சியின் கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மேல் பணம் எடுப்பது மற்றும் செலுத்துவது, சந்தேகத்துக்குரிய வேறு ஏதேனும் பணப் பரிவா்த்தனை, வாக்காளா்களுக்கு பணம் வழங்கப் பயன்படுத்தப்படலாம். எனவே, இது போன்ற தகவல்களை அறிக்கை மூலம் அறிந்து கொள்ள முடியும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com