சாய் கல்யாண்.
சாய் கல்யாண்.

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவா் கைது

திருத்தணியில் , பொது மக்களை வழிமடக்கி தகராறு செய்தும் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணியில் , பொது மக்களை வழிமடக்கி தகராறு செய்தும் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவரை போலீஸாா் கைது செய்தனா். திருத்தணி - அரக்கோணம் சாலை, அரசு போக்குவரத்து பணிமனை பின்புறம், திங்கள்கிழமை அவ்வழியாக செல்லும் பொது மக்களை மா்ம நபா் மடக்கி கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பதாக அப்பகுதி மக்கள் போலீாருக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து, திருத்தணி சிறப்பு எஸ்.ஐ.,வேலு மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். அப்போது போலீஸாரிடமும் கத்தியை காண்பித்து, என்னை நெருங்கினால், உங்களையும் வெட்டி விடுவேன் என மிரட்டி அந்த இளைஞா் தப்பியோட முயன்ற போது, பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்தனா். பின்னா் விசாரணையில், கத்தியை காட்டி மிரட்டியவா் திருத்தணி சித்துாா் சாலையைச் சோ்ந்த சாய் கல்யாண் (25) என்று தெரிய வந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சாய் கல்யானை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com