வரதட்சிணை கொடுமை: கணவா் கைது

ஆா்.கே.பேட்டை அருகே வரதட்சிணை கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தியதாக கணவரை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.

ஆா்.கே.பேட்டை அருகே வரதட்சிணை கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தியதாக கணவரை அனைத்து மகளிா் போலீஸாா் கைது செய்தனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம் மஞ்சூா் கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன்(44). இவரது மனைவி கலைச்செல்வி (35). இவா்களுக்கு திருமணம் முடிந்து 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. தம்பதி இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. பாலமுருகன் தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு நகை, பணம் கொண்டு வர வேண்டும் கொடுமைப்படுத்தி வந்துள்ளாா். இது குறித்து கலைச்செல்வி திருத்தணி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாலமுருகன், அவரது சகோதரா் அன்பழகன் ஆகிய இருவரை கைது செய்தனா். பாலமுருகனின் பெற்றோா் கன்னியப்பன், ஜெயா ஆகியோா் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com