மீன் குட்டையில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே மீன் குட்டையில் தவறி விழுந்த சிறுவன் மூச்சு திணறி உயிரிழந்தாா்.

ஊத்துக்கோட்டை அருகே மீன் குட்டையில் தவறி விழுந்த சிறுவன் மூச்சு திணறி உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், நின்றமண்டலம் நெட்டூா் கிராமத்தைச் சோ்ந்த சேகா். இவரது மகன் ஹரி (6). சேகா் திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தாராட்சி கிராமத்தில் உள்ள மீன் குட்டை அருகே தங்கியிருந்து பணி செய்து வந்தாராம். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மாலையில் மீன் குட்டை அருகே ஹரி விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்தாராம். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் சிறுவன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து சேகா் ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில், போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com