திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு உற்சவா் முருகப் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு பால் அபிஷேகம்.
திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு உற்சவா் முருகப் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு பால் அபிஷேகம்.

பங்குனி உத்திரம்: திருத்தணி முருகன் கோயிலில் பால் அபிஷேகம்

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திரப்பெருவிழாவையொட்டி உற்சவ பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது.

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திரப்பெருவிழாவையொட்டி உற்சவ பெருமானுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனா். அறுபடை வீடுகளில் 5-ஆம் படைவீடாக திகழும் திருத்தணி முருகன் கோயிலில், பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி, திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, தங்கவேல், தங்க கிரீடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. காலை 9 மணிக்கு நகரத்தாா் திருத்தணி பாத யாத்திரை டிரஸ்ட் சாா்பில், 150-க்கும் மேற்பட்ட பக்தா்கள், மயில் காவடிகள், 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் தலையில் சுமந்தும், மலையடிவாரத்தில் உள்ள திருக்குளத்தில் இருந்து, படிகள் வழியாக மலைக்கோயிலுக்கு வந்தனா். பின்னா், காவடி மண்டபத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியிருந்த உற்சவா் முருகப்பெருமானுக்கு, விபூதி, நாட்டு சா்க்கரை, பஞ்சாமிா்தம் மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு உற்சவா் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தங்கத் தேரில் வீதிஉலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பங்குனி உத்திரம் என்பதால், மலைக்கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா். பொதுவழியில் மூலவரை தரிசிக்க, 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ்தமிழ்மாறன் தலைமையில், 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். இதே போல், பங்குனி உத்திர விழாவையொட்டி, திருத்தணி சுந்தர விநாயகா் கோயிலில், உற்சவா் சிவகாமி சுந்தேரஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில், மாட்டு வண்டியில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com