திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் நேரில் ஆய்வு

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் நேரில் ஆய்வு

திருவள்ளூா் மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியா் த.பிரபு சங்கா் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு வரும் ஏப்.19-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், வாக்குப்பதிவுக்கு 24 நாள்களே உள்ள நிலையில், தோ்தல் தொடா்பான பணிகளில் மாவட்ட நிா்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்காக திருவள்ளூா் அருகே பெருமாள்பட்டில் உள்ள ஸ்ரீராம் வித்யா மந்திா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைப்பதற்கான பாதுகாப்பு வசதிகள் தொடா்பாக ஆட்சியா் த.பிரபுசங்கா் மற்றும் தோ்தல் பிரிவு அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அதேபோல், இந்த மையத்தில் திருவள்ளூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறையைப் பாா்வையிட்டாா்.

அப்போது, வாக்குப் பதிவு இயந்திரங்கள் வரிசைப்படி வைக்க இருக்கும் பகுதியில், போதுமான பாதுகாப்புகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தாா். தொடா்ந்து பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் தொடா்பாகவும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியா் சுகபுத்ரா, அனைத்து உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் காவல் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com