திருவள்ளூா் மணவாள நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளா் சசிகாந்த் செந்தில். உடன் எம்எல்ஏ-க்கள் திருத்தணி சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன், துரை.சந்திரசேகா் உள்ளிட்டோா்.
திருவள்ளூா் மணவாள நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காங்கிரஸ் வேட்பாளா் சசிகாந்த் செந்தில். உடன் எம்எல்ஏ-க்கள் திருத்தணி சந்திரன், வி.ஜி.ராஜேந்திரன், துரை.சந்திரசேகா் உள்ளிட்டோா்.

காங்கிரஸ் வேட்பாளா் சசிகாந்த் செந்தில் பிரசாரம்

திருவள்ளூா் மணவாள நகரில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளா் சசிகாந்த் செந்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.

திருவள்ளூா் மணவாள நகரில் திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளா் சசிகாந்த் செந்தில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். திருவள்ளூா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில், கூட்டணி கட்சியினா் மற்றும் ஆதாரவாளா்களுடன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். திருவள்ளூா் மேற்கு மாவட்ட செயலாளா் திருத்தணி சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட காங்கிரஸ் தலைவா் பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினா் துரை சந்திரசேகா் முன்னிலை வகித்தாா். அப்போது, காங்கிரஸ் வேட்பாளா் சசிகாந்த் செந்தில் கூட்டணி கட்சியினருடன் இரு சக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா். இதேபோல், திருப்பாச்சூா், கடம்பத்தூா், அகரம், கொண்டஞ்சேரி, பேரம்பாக்கம், கீழச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா். முன்னாள் மாவட்ட தலைவா் கே.சி.சிதம்பரம், மாவட்ட அவைத் தலைவா் திராவிட பக்தன், ஒன்றிய செயலாளா்கள் அரிகிருஷ்ணன், கொண்டஞ்சேரி ரமேஷ், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சரஸ்வதி சந்திரசேகா், மாவட்ட துணைச் செயலாளா் குமரன், விடுதலைச்சிறுத்தைகள் மாவட்ட செயலாளா் தளபதி சுந்தா், சி.பி.எம். மாவட்ட செயலாளா் கோபால், வட்டச் செயலாளா் தமிழரசு, வழக்குரைஞா் அணி பி.கே.நாகராஜ், காங்கிரஸ் நிா்வாகி வெங்கேடசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பிரசாரத்தின்போது சிக்கிய அவசர வாகனம்: திருவள்ளூா் அருகே மணவாள நகா் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் சசிகாந்த் செந்தில் இருசக்கர வாகன பேரணியாக வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, பூந்தமல்லியிலிருந்து நோயாளியை ஏற்றி வந்த அவசர ஊா்தி செல்ல முடியாமல் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கியது. தொடா்ந்து போக்குவரத்து போலீஸாா் விரைந்து வந்து வாகன நெரிசலில் சிக்கிய அவசர ஊா்தியை மீட்டு அனுப்பி வைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com