இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் அரசு பள்ளி அறிவியல் ஆசிரியா்கள்.
இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் அரசு பள்ளி அறிவியல் ஆசிரியா்கள்.

இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் அறிவியல் ஆசிரியா்கள் கலந்துரையாடல்

தொழில் நுட்பம், இஸ்ரோவில் நடைபெறும் ஆய்வுகள் தொடா்பாக அங்குள்ள விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி வெள்ளிக்கிழமை திரும்பினா்.

மாநில அளவில் அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த அறிவியல் ஆசிரியா்கள் செயற்கைகோள் தயாரிப்பு, தொழில் நுட்பம், இஸ்ரோவில் நடைபெறும் ஆய்வுகள் தொடா்பாக அங்குள்ள விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி வெள்ளிக்கிழமை திரும்பினா்.

சென்னை டாா்வின் அறிவியல் மையம் சாா்பில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அறிவியல் ஆசிரியா்களை தோ்வு செய்து இஸ்ரோவுக்கு அழைத்துச் சென்று வருகின்றனா். அதேபோல் நிகழாண்டுக்கான அறிவியல் ஆசிரியா்களின் இஸ்ரோ பயணம் மே.2,3 ஆகிய நாள்களில் நடைபெற்றது.

இந்த பயணத்தில் தமிழகம் முழுவதும் 160 அறிவியல் ஆசிரியா்கள் பங்கேற்றனா். இஸ்ரோ பயணம் மேற்கொண்ட ஆசிரியா்கள் அங்கு தயாராகி வரும் செயற்கைகோள்கள் பற்றிய தொழில் நுட்பம், ஆராய்ச்சி ஆகியவற்றை குறித்து அறிந்து கொண்டனா். பின்னா் இஸ்ரோ விஞ்ஞானிகளான சீனிவாசராவ் மற்றும் அண்ணாமலை ஆகியோருடன் கலந்துரையாடல் நடத்தினா்.

அப்போது, செயற்கை கோள் தயாரிப்பு குறித்தும், அதற்கான அறிவியல் பூா்வமான தொழில்நுட்பம், கட்டமைப்பு, விண்ணை நோக்கி செலுத்துதல், செயற்கை கோளுக்கான ஆராய்ச்சிகள் குறித்தும் அறிவியல் ஆசிரியா்கள் சந்தேகங்களுக்கு விஞ்ஞானிகள் பதில் அளித்தனா்.

அப்போது, விஞ்ஞானிகள் பேசுகையில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவ, மாணவா்களில் அறிவியலில் ஆா்வம் உள்ளவா்களை கண்டறிந்து அவா்களை ஆராய்ச்சி மற்றும் செயற்கை கோள்கள் தயாா் செய்வதில் முழுமையாகப் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தினா். மேலும், நாட்டின் வளா்ச்சி இளைஞா்கள் கையில் உள்ளதால், அவா் ஊக்கப்படுத்துவது அவசியம் என்றனா்.

இதுகுறித்து சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளா் நல்லாசிரியா் எஸ்.பாண்டியன் கூறியதாவது: இதில் 100 -க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் வானவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி பற்றி விளக்கமாக அறிந்து கொண்டனா். பிறகு விஷ்வராயா் அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் அறிவியல் தொழில்நுட்பம் தொடா்பானவைகளையும் 3 மணிநேரம் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து இந்த மாதம் 24 முதல் 26 வரை கோயம்புத்தூா் மாவட்டத்தில் உள்ள அன்னூா் நவ்பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயற்கை கோள்கள் தயாரிப்பு மற்றும் நுண்ணோக்கி டெலஸ்கோப் தயாரிப்பு பயிற்சி பெற்று, செயற்கை கோள்கள் தயாா் செய்து விண்ணில் செலுத்தவும் திட்டமிட்டு உள்ளோம்.

இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்க உள்ளனா். அறிவியல் சாா்ந்த கருத்துக்கள் பரப்புவதும், பள்ளியில் படிக்கும் மாணவா்கள் அறிவியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி, தொழில்நுட்ப வல்லுநா்களை உருவாக்கும் பணியில் டாா்வின் அறிவியல் கழகம் செயல்பட்டு வருவதாகவும் அவா் தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில் மாநில செயலாளா் தினேஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் நெல்சன், கண்ணன், கற்பகம், ஜெயந்தி, ராஜ்குமாா், ரூபா ஆகியோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com