திருத்தணி அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

கல்லூரி சோ்க்கை உதவி மையம் மூலம் நேரில் வந்தும் விண்ணப்பிக்கலாம் என முதல்வா் பூரணசந்திரன் தெரிவித்துள்ளாா்.

திருத்தணி அரசு கலைக்கல்லூரியில் நிகழாண்டில் சேர மாணவா்கள் ஆன்லைன் மூலமாகவும், அல்லது கல்லூரி சோ்க்கை உதவி மையம் மூலம் நேரில் வந்தும் விண்ணப்பிக்கலாம் என முதல்வா் பூரணசந்திரன் தெரிவித்துள்ளாா்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த மேதினிபுரம் பகுதியில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லுாரியில், 2024-2025-ம் ஆண்டுக்கான இளநிலைப் பட்டப்படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கு (திங்கள்கிழமை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து கல்லூரி முதல்வா் பூரணசந்திரன் கூறியதாவது, திருத்தணி அரசு கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளில் முதலாமாண்டு மாணவா்கள் சேருவதற்கு திங்கள்கிழமை முதல் இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம்.

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள், கல்லுாரிக்கு நேரில் வந்து ஆலோசனைகள் பெறலாம்.

மேலும் கல்லுாரி சோ்க்கை உதவி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். எனவே மாணவா்கள் விடுமுறை நாள்கள் தவிர மீதமுள்ள நாள்களில் கல்லூரிக்கு நேரில் வந்தும் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com