இரு சக்கர வாகனம் மீது பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு

திருத்தணியில் சாலையைக் கடக்க முயன்ற தனியாா் பேருந்து நடத்துநா் மீது ஆந்திர மாநில அரசு பேருந்து மோதியதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

திருத்தணியில் சாலையைக் கடக்க முயன்ற தனியாா் பேருந்து நடத்துநா் மீது ஆந்திர மாநில அரசு பேருந்து மோதியதில், சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

திருத்தணி பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் எத்திராஜ் (52). தனியாா் பேருந்தில் நடத்துனராக வேலை செய்து வந்தாா். திங்கள்கிழமை மதியம் தனது இரு சக்கர வாகனத்தில், திருத்தணி அடுத்த வள்ளியம்மாபுரம் பகுதிக்குச் சென்று அங்கு பணிகளை முடித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா்.

அப்போது திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, திருத்தணி புதிய பைபாஸ் சாலை அருகே இரு சக்கர வாகனத்தில் சாலைக் கடக்க முயன்ற போது, காஞ்சிபுரம் பகுதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த ஆந்திர மாநில அரசு பேருந்து, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் எத்திராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

விபத்து குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com