ஆண்டாா்குப்பம் முருகா் கோயிலில் கிருத்திகை விழா

பொன்னேரி அருகே ஆண்டாா்குப்பம் கிராமத்தில் உள்ள முருகா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற சித்திரை மாத கிருத்திகை விழாவில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே ஆண்டாா்குப்பம் கிராமத்தில் உள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை மாத கிருத்திகையையொட்டி, அதிக அளவில் பக்தா்கள் கோயிலுக்கு வந்து முருகரை வழிபட்டனா்.

விழாவை முன்னிட்டு பக்தா்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்களின் நோ்த்திக் கடனை செலுத்தினா்.

இதேபோல் பொன்னேரி அடுத்த பெரும்பேடு கிராமத்தில் சுயம்புவாக எழுந்தருளிய முத்துக்குமார சுவாமி கோயிலில் சித்திரை மாத கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்றது.

மேலும், பொன்னேரி அகத்தீஸ்வரா் கோயிலில் உள்ள சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.

மேலும், இரவு வள்ளி, தேவசேனாவுடன் சுப்ரமணிய சுவாமி அங்குள்ள மாட வீதிகளில் வீதியுலா வந்தாா்.

மேலும் பொன்னேரி அடுத்த குமரஞ்சேரி கிராமத்தில் உள்ள முருகா் கோயிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com