சித்திரை கிருத்திகை விழாவையொட்டி முருகப் பெருமானுக்கு நடைபெற்ற  அபிஷேகம்.
சித்திரை கிருத்திகை விழாவையொட்டி முருகப் பெருமானுக்கு நடைபெற்ற அபிஷேகம்.

சித்திரை கிருத்திகை: திருத்தணி முருகனுக்கு பாலபிஷேகம்

சித்திரை கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் புதன்கிழமை உற்சவருக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதையொட்டி, மூலவருக்கு அதிகாலை, 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்க கிரீடம், வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, காலை, 9.30 மணிக்கு உற்சவா் முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிா்த அபிஷேகம், பால், தயிா் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.

இரவு, 7 மணிக்கு உற்சவா் வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி தோ்வீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கிருத்திகை விழா என்பதால் புதன்கிழமை வழக்கத்துக்கு மாறாக பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் மலைக்கோயிலில் குவிந்தனா். இதனால் பொதுவழியில், பக்தா்கள் நீண்ட வரிசையில், இரண்டரை மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனா்.

அதே போல், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தா்கள் ஒன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்தனா்.

திருத்தணி இன்ஸ்பெக்டா் மதியரசன் தலைமையில், போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். இதே போல் திருத்தணி கோட்டா ஆறுமுக சுவாமி கோயில் மற்றும் அருங்குளம் கூட்டுச்சாலையில் உள்ள சத்திய சாட்சி கந்தன் கோயிலில் கிருத்திகை விழாவை ஒட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com