முத்து
முத்து

திருத்தணி கோயில் மலைப்படி வழியாக வந்த பக்தா் உயிரிழப்பு

திருத்தணிமுருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய மலைப்படிகள் வழியாக வந்த பக்தா் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கிருத்திகை தினத்தை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காவடி எடுத்தும் மலைப்படிகளுக்கு மஞ்சள், குங்குமம், கற்பூரம் ஏற்றியவாறு ஆயிரக்கணக்கான பக்தா்கள் வேண்டுதலை நிறைவேற்றி வந்துகொண்டிருந்தனா்.

இந்நிலையில், சோழவரம் அருகே சிறுணியம் கிராமத்தைச் சோ்ந்த முத்து (51) தனது குடும்பத்துடன் மலைப்படி வழியாக கோயிலுக்கு நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது, 250 படிகளை தாண்டி ஏறிச் சென்ற போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு சம்பவ இடத்திலே உயிரிழந்தாா்.

பின்னா் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பிவைத்தனா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மலைக் கோயிலுக்கு படிகள் வழியாக ஏறிச் சென்ற பக்தா் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com