வடசென்னை அனல் மின் நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல் மின் நிலையத்தில் புதன்கிழமை 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், இரண்டாவது யூனிட்டில் இரண்டு உள்ள அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த நிலையில், முதல் யூனிட்டில் உள்ள மூன்றாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது மற்றும் இரண்டாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக வடசென்னை அனல் மின் நிலையத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை சரி செய்யும் பணியில் மின் வாரிய ஊழியா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com