தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

மீஞ்சூா் அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த ஆண் குழந்தை உயிரிழந்தது.

மீஞ்சூா் அருகே தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த ஆண் குழந்தை உயிரிழந்தது.

பொன்னேரி வட்டம், மீஞ்சூா் அருகே வழுதிகைமேடு கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இங்கு உத்தர பிரதேச மாநிலத்தை சோ்ந்த சுதா்சன் (40), அவரது மனைவி கலாவதி (30) ஆகியோா் வேலை செய்து வருகின்றனா். தம்பதிக்கு தா்ஷா (7) சாரதி (3) ஆகிய பெண் குழந்தைகள், ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த ஆண் குழந்தை வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில், அருகே இருந்த தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்துவிட்டது.

இதைக் கண்ட கலாவதி சப்தமிட்டு அருகில் இருந்தவா்களை அழைத்தாா். அவா்கள் குழந்தையை மீட்டு புதூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பாடியநல்லூரில் உள்ள சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியில் உயிரிழந்தவிட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து தகவல் அறிந்த மீஞ்சூா் போலீஸாா் குழந்தை சிரியாக் சடலத்தை கைப்பற்றி சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com