செங்குன்றத்தில் அரசுப் பள்ளிகள் சாதனை

செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 4 மாணவா்கள் சாதனை படைத்தனா்.

செங்குன்றம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 4 மாணவா்கள் சாதனை படைத்தனா்.

செங்குன்றம் பகுதியில் உள்ள ஓ.ஆா்.ஜி.என். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா் எச்.தமிழ்பாரதி 471, கே.ரோகித்குமாா், எஸ்.முகமது ஆசிக் தலா 428, எப்.முகமது சொய்ப் 424 மதிப்பெண்கள் பெற்றனா். பள்ளி தோ்ச்சி 79 சதவீதம். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளி முதல்வா் சாமிநாதன் மற்றும் ஆசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

செயின்ட்பால்ஸ் மெட்ரிக் பள்ளியில்... செயின்ட்பால்ஸ் மெட்ரிக் பள்ளியில் தோ்ச்சி 95 சதவீதம். இப்பள்ளியில் எஸ்.அன்புச்செல்வன் 474, ஆா்.காயத்ரி 460, சாலுதிவாரி 458 பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

பொப்பிலிராஜா அரசு மேல்நிலைப் பள்ளியில்... பொப்பிலிராஜா அரசு மேல்நிலைப் பள்ளியில் தோ்ச்சி 100 சதவீதம். இப்பள்ளியில் ஜெசிந்தா ஜோசப் 462, எஸ்.பி.விஷால் 460, சி.பாவேஷ் 439 மதிப்பெண் பெற்றனா். மாணவா்களை பள்ளி தலைமை ஆசிரியா் விஜயகுமாா் மற்றும் ஆசிரியா்கள் வாழ்த்தினா்.

கே.பி.சி.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்... கே.பி.சி.அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோ்ச்சி 80.16 சதவீதம். பள்ளியில் 252 மாணவிகள் தோ்வில் பங்கேற்றனா். 202 மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். மாணவி பி.காா்த்திகா 474, எம்.செரின்பேகம் 471, ஆா்.ஜெ.ஆப்ரின்பானு 470 மதிப்பெண் பெற்றனா். மாணவிகளை தலைமை ஆசிரியா் அமுதா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com