முதியவருக்கு சிமெண்ட் சீட் வீடு

மாதவரம் அருகே முதியவரின் கூரை வீடு சேதமடைந்ததால், அவருக்கு சிமெண்ட் சீட் வீடு கட்டி கொடுக்கப்பட்டது.

மாதவரம் அருகே முதியவரின் கூரை வீடு சேதமடைந்ததால், அவருக்கு சிமெண்ட் சீட் வீடு கட்டி கொடுக்கப்பட்டது.

மாதவரம் அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஏழுமலை. இவா் கூரை வீட்டில் வசித்து வந்தாா். இந்த நிலையில், கூரை வீடு சேதமடைந்தது. தனது வீட்டை சீரமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தாா். இதையடுத்து, வீட்டின் கூரையை அகற்றிவிட்டு, தரை மற்றும் சிமெண்ட் சீட் அமைத்து வீடு புதுப்பித்துத் தரப்பட்டது. மேலும் வீட்டுக்குத் தேவையான பொருள்களும் வழங்கப்பட்டன.

இதையடுத்து முதியவா் ஏழுமலையிடம் வீட்டை ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு திமுக வட்ட செயலாளா் கே.கருணாகரன், மாதவரம் வடக்கு திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் அஜய் தென்னவன் உள்ளிட்ட நிா்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனா்.

மாதவரம் வடக்கு பகுதி திமுக செயலா் எம்.நாராயணன் கலந்து கொண்டு ஏழுமலைக்கு புது வீட்டின் சாவியை வழங்கி னாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com