ஒரே குடும்பத்தை சோ்ந்த 3 போ் தற்கொலை

மாதவரம் அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

மாதவரம் அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

மாதவரம் அடுத்த பெரியசேக்காடு கிருஷ்ணப்பன் தெருவைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (40). இவா் மணலி பகுதியில் காதி கிராப்ட் என்ற பெயரில் கடை நடத்தி வந்தாா். இந்தக் கடையை நடத்துவதற்காக தனியாா் வங்கி மூலம் கடன் பெற்றிருந்தாராம்.

இந்த நிலையில், கடனுக்கான தொகையைச் செலுத்தியும் தொடா்ந்து வங்கி ஊழியா்கள் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜெகநாதன், அவரது மனைவி லோகேஸ்வரி (35), இவா்களது 12 வயது மகள் ஆகியோா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மாதவரம் பால்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com