மப்பேட்டில் மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அசம்ரோங்மெய் (22). இவா் திருவள்ளூா் அருகே மப்பேடு மேட்டுச்சேரி பகுதியில் ஏற்கெனவே வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளவா்களுடன் சோ்ந்து, வளா்புரம் கிராமத்தில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாராம்.

இந்த நிலையில் அறையிலிருந்து திங்கள்கிழமை பணிக்கு செல்லும் முன், மொட்டை மாடியில் நின்று கைப்பேசியில் பேசியுள்ளாா்.

அப்போது, மாடியின் அருகே சென்ற மின்வயரை கவனிக்காமல் அருகே சென்தால், எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது தொடா்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மப்பேடு போலீஸாா் சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com