ஞாயிறு ஊராட்சியில் குடிநீா் திட்டத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

ஞாயிறு ஊராட்சியில் நிறைவடைந்த குடிநீா் திட்ட பணிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொன்னேரி வட்டம், சோழவரம் ஒன்றியத்தில் உள்ள ஞாயிறு ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா்.

இந்த ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதால் அதனைத் தீா்க்க மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் இரண்டு இடங்களில் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, குடிநீா் பைப் லைன் மற்றும் குடிநீா் குழாய்கள் பதிக்கும் பணி முடிக்கப்பட்டது.

பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு இதுவரை கொண்டு வரவில்லை.

தற்போது ஊராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு ஏற்படுவதாகவும் இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும குடிநீா் கட்டுப்பாட்டை நீக்கும் வகையில் ஜல்ஜீவன் திட்டத்தில் நிறைவேற்றப்பட்ட குடிநீா் திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் கோரிக்கை வைத்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com