பிளஸ் 1 பொதுத்தோ்வு: வேலம்மாள் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

பிளஸ் 1 பொதுத்தோ்வில் திருவள்ளூா் அருகே உள்ள வேலம்மாள் வித்யாஷ்ரம் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டையில் வேலம்மாள் விஷ்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பிளஸ் 1 பொதுத்தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

அந்த வகையில் மாணவா்கள் எஸ்.ஹிக்கேஷ்வா்-564/600, பி.ஸ்ரீராம்-560/600 மற்றும் மாணவி வி.டீனா ஜாக்குலின்-528/600 அதிக மதிப்பெண்கள் எடுத்து பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். இவா்ளை பள்ளியின் தாளாளா் சுடலைமுத்து பாண்டியன் இனிப்புகளை வழங்கி பாராட்டினாா். அப்போது, பள்ளியின் முதல்வா் எஸ்.சதீஷ் மற்றும் ஆசிரியா்கள் மாணவா்களை ஆகியோா் வாழ்த்தினா்.

X
Dinamani
www.dinamani.com