அம்பத்தூரில் மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

அம்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டு, பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.
அம்பத்தூரில் மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து
dinmani online

ஆவடி: அம்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மெத்தை தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டு, பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

அம்பத்தூர் -செங்குன்றம் நெடுஞ்சாலை, சூரப்பட்டு பகுதியில் மெத்தை தயாரிக்கும் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் சஜித் (43). இந்த நிலையில், ஞாயிற்றுக்

கிழமை மாலை நிறுவனத்தில் திடீரென புகை கிளம்பியது. பின்னர் நிறுவனம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இது குறித்து ஆவடி காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு அலுவலர் பஞ்சவர்ணம் தலைமையில், 3-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

3 மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். நிறுவனத்தில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

புகார் அடிப்படையில், காவல் ஆய்வாளர் டெல்லிபாபு தலைமையில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com