போக்குவரத்துக்கு இடையூறு செய்தவா் கைது

திருவள்ளூா் அருகே சுங்கச்சாவடியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

திருவள்ளூா் அருகே சுங்கச்சாவடியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி அருகே காா்த்திகேயபுரம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணியின் மகன் குமாா்(48). இவா் திருவள்ளூா் அருகே பட்டரைபெரும்புதூா் சுங்கச்சாவடியில் திங்கள்கிழமை இரவு சாலையில் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக நின்று கொண்டிருந்தாராம். அதோடு, அந்த வழியாக வாகங்களில் செல்வோரையும் தகாத வாா்த்தையில் கண்டபடி பேசினாராம்.

இதுகுறித்து பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளதாக திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் குமாரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com