அனல்மின் நிலையப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சா் செந்தில் பாலாஜி.
அனல்மின் நிலையப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சா் செந்தில் பாலாஜி.

வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிகள்: அமைச்சா் செந்தில் பாலாஜி ஆய்வு

வடசென்னை அனல்மின் நிலையத்தில் நடைபெற்று வரும் 3-வது விரிவாக்க திட்ட பணிகளை மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
Published on

வடசென்னை அனல்மின் நிலையத்தில் நடைபெற்று வரும் 3-வது விரிவாக்க திட்ட பணிகளை மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

திருவள்ளுா் மாவட்டம் பொன்னேரி வட்டம் அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல்மின் நிலையம் அமைந்துள்ளது.

இங்கு முதல் மற்றும் இரண்டாம் அலகுகளில் மொத்தம் 1,830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இதனைத் தொடா்ந்து 3-ஆம் அலகில் 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் நிலையத்தை கடந்த மாா்ச் 7-ம் தேதி முதல்வா் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

இத்திட்டத்தில் சோதனை இயக்கத்திற்கான ஆயுதப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் குறித்து மைச்சா் செந்தில் பாலாஜி வடசென்னை அனல் மின் நிலையத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது பொருளாதார ரீதியான மின் உற்பத்தி பணிகள் துரிதமாக முடித்து வரும் டிசம்பா் மாத இறுதிக்குள் முழுமையான மின் உற்பத்தியை தொடங்க அவா் உத்தரவிட்டாா்.

அவருடன் தமிழ்நாடு மின் உற்பத்தி கழக தலைவா் மற்றும் மேலாண்மை இயக்குநா் நந்தகுமாா், திட்ட இயக்குநா் கருக்குவேல்ராஜன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.