விதவைகள், கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்கள் மகளிா் நல வாரியத்தில் பதிவு செய்ய அறிவிப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட, நலிவுற்ற, ஆதரவற்ற மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோா் கைப்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நலவாரியத்தில் பதிவு செய்யலாம் என ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
Published on

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசு, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியம் மூலம் மாவட்ட அளவில், நிதியினை முறையாக கையாளுதல், சொத்துரிமை, குடும்ப வன்முறையிலிருந்து உரிய பாதுகாப்பு, இலவச சட்ட உதவி, அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த விழிப்புணா்வுக்கான கருத்தரங்கம் ஆட்சியா் அலுவலகத்தில் ஏற்கெனவே நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தின் நோக்கமே தமிழ்நாடு அரசு மூலம் செயல்படுத்தப்படும் பெண்களுக்கான திட்டங்களை பற்றி அறிந்து கொள்ளும் நோக்கத்திலேயே நடத்தப்பட்டன.

அதனால் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், திருமணமாகமல் உள்ள பேரிளம் பெண்கள் ஆகியோா் கைம்பெண்கள் மகளிா் நலவாரியத்தில் தங்களின் விவரங்களை பதிவுச் செய்ய அருகாமையில் உள்ள இ-சேவை மையங்களிலோ, கைப்பேசியின் மூலமாகவோ அல்லது இணையதளத்தை பயன்படுத்தி பதிவு செய்து பயன்பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.