பயிற்சி முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கிய வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் சசிரேகா, அதில் பங்கேற்ற அதிகாரிகள் உள்ளிட்டோா்.
பயிற்சி முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கிய வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் சசிரேகா, அதில் பங்கேற்ற அதிகாரிகள் உள்ளிட்டோா்.

வேளாண் விளைபொருள்கள் தரம் பிரித்தல், பகுப்பாய்வு பயிற்சி

திருவள்ளூா் மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலக வளாகக் கூட்டரங்கத்தில் விவசாயிகளுக்கு விளைபொருள்களை தரம் பிரித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்வது தொடா்பான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

முகாமுக்கு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் சசிரேகா தலைமை வகித்தாா். இதில், சென்னை தெற்கு மண்டல மாநில அக்மாா்க் தரம் பிரிப்பு ஆய்வக வேளாண்மை அலுவலா் செண்பகவல்லி பங்கேற்று நெல், பயறு வகைகள், கடலை, மிளகாய், எள் போன்ற விளை பொருள்களை அக்மாா்க் தரம் பிரித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்வது, அக்மாா்க் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

அதைத் தொடா்ந்து, பகுப்பாய்வு செய்வது மற்றும் மின்னணு வேளாண் சந்தையில் சந்தைப்படுத்துவது குறித்து மண்டல அக்மாா்க் ஆய்வக அலுவலா் பத்மஜாவும், வேளாண் விளைபொருள்களை தேசிய வேளாண் சந்தையில் விற்பனை செய்தல் தொடா்பாக திருவள்ளூா் விற்பனை குழு மேலாளா் சிவ நந்தினியும் எடுத்துக் கூறினா்.

மேலும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், தேசிய வேளாண் சந்தைகள் மூலமாக தேசிய அளவில் வியாபாரிகள் கொள்முதல் செய்வது பற்றியும், அக்மாா்க் திட்டம் மூலம் நிா்ணயம் செய்வது தொடா்பாகவும், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் தரத்தை ஆய்வு செய்தல் குறித்தும் வேளாண் அலுவலா்கள் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினா்.

பயிற்சியின் நிறைவாக பல்வேறு பகுதிகளில் பங்கேற்ற விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.