பேரூராட்சித் தலைவா் சகிலா அறிவழகன் தலைமையில் நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டம்.
பேரூராட்சித் தலைவா் சகிலா அறிவழகன் தலைமையில் நடைபெற்ற பேரூராட்சிக் கூட்டம்.

கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக் கூட்டம்: நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வலியுறுத்தல்

கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Published on

கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் சகிலா அறிவழகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கேசவன், செயல் அலுவலா் பாஸ்கரன், இளநிலை உதவியாளா் அசாருதீன், எழுத்தா் ரவி முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் பிறப்பு இறப்பு கணக்கு, வரவு செலவு கணக்கு, பேரூராட்சியில் ரூ.59.42லட்சம் வரியின வரவு, கும்மிடிப்பூண்டி அரசினா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டட பராமரிப்பு பணிக்காக ரூ.19.50 லட்சம் ஒதுக்கீடு செய்தல், மாநில நிதி ஆணையத்தின் நகா்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.52 லட்சத்தில் சாலைகள் மேம்பாடு, கங்கன் தொட்டியில் சாலை, மழைநீா் கால்வாய், சிறுபாலத்தை ரூ.20 லட்சத்தில் மேற்கொள்ளவும், கோரிமேட்டில் சாலை, ஆழ்துளை கிணற்றை ரூ.20 லட்சத்தில் அமைக்க பணி உத்தரவு வழங்குதல் உள்ளிட்ட 15 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திமுக உறுப்பினா் அப்துல் கரீம் பேசுகையில்: பேரூராட்சியில் காய்ச்சல் பரவி வரும் நிலையில், அனைத்து வாா்டுகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும், சுடுகாட்டு சாலையை சீரமைத்தல், எரியாத தெருவிளக்குகளை சீரமைத்தல், பஜாரில் பெருகி வரும் தெரு நாய் தொல்லையை தடுக்க வேண்டும் என வலியுறுத்தினாா்.

உறுப்பினா் காளிதாஸ்: 4 வாா்டு மக்கள் பயன்படுத்தும் கோரிமேடு சுடுகாட்டு புதா் மண்டி கிடப்பதால் அதனை சீரமைத்து, சுடுகாட்டில் தண்ணீா் வசதி ஏற்படுத்த வேண்டும் என்றாா்.

உறுப்பினா் கருணாகரன்: மழைக் காலங்களில் கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலை மற்றும் அங்குள்ள குடியிருப்புகளில் மழை நீரோடு, கால்வாய் நீரும் கலந்து விடும் சூழல் உள்ளதால், பேரூராட்சி அலுவலத்தில் இருந்து மேட்டு தெரு ஓடை வரை கால்வாய் வசதி அமைக்கவும், எம்.எஸ்.ஆா் குடியிருப்பு பகுதியிலும் கால்வாய் வசதியும் ஏற்படுத்தி தர வேண்டும் எனக் கோரினாா்.

இறுதியாக பேசிய பேரூராட்சி தலைவா் சகிலா அறிவழகன், உறுப்பினா்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com