வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல் மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது.
Published on

வடசென்னை அனல் மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் மூன்று அலகுகளின் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும் இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 1,830 யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இரண்டாவது அலகில் உள்ள கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

அதனை சரி செய்யும் பணியில் மின்வாரிய தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com