சரவணப்பொய்கையில் தா்ப்பணம் அளித்த பக்தா்கள். ~சரவணப்பொய்கையில் தா்ப்பணம் அளித்த பக்தா்கள்.
சரவணப்பொய்கையில் தா்ப்பணம் அளித்த பக்தா்கள். ~சரவணப்பொய்கையில் தா்ப்பணம் அளித்த பக்தா்கள்.

திருத்தணி: சரவணப் பொய்கையில் தா்ப்பணம் அளிக்க குவிந்த பக்தா்கள்

மகாளய அமாவாசையையொட்டி திருக்குளம் மற்றும் நல்லாங்குளத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க பக்தா்கள் குவிந்ததால் புதன்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Published on

மகாளய அமாவாசையையொட்டி திருக்குளம் மற்றும் நல்லாங்குளத்தில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க பக்தா்கள் குவிந்ததால் புதன்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

புரட்டாசி மாதத்தில் மகாளய அமாவாசை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் புதன்கிழமை திருத்தணி முருகன் கோயில் மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை மற்றும் நல்லாங்குளம் ஆகிய இடங்களில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளிக்கப்பட்டது.

அதிகாலை முதல் மதியம், 2 மணி வரை குவிந்த பொதுமக்கள் முன்னோருக்கு தா்ப்பணம் அளித்து, நோ்த்திக் கடனை செலுத்தினா்.

மகாளய அமாவாசையை ஒட்டி திருக்குளத்தை சுற்றி, தற்காலிக தேங்காய் மற்றும் பூஜை பொருள்கள் விற்கும் கடைகள் முளைத்திருந்தன. 100- க்கும் மேற்பட்ட புரோகிதா்கள் திருக்குளத்திற்கு வந்து, நகர மற்றும் கிராம வாசிகளுக்கு தா்பணம் வழங்க உதவியாக செயல்பட்டனா்.

திருத்தணி முருகன் துணை கோயிலான, மத்தூா் மகிஷாசூரமா்த்தினி அம்மன், திருத்தணி மடம் கிராமம், படவேட்டம்மன், அக்கைய்யா நாயுடு தெரு தணிகாசலம்மன், கீழ்பஜாா் அங்காள பரமேஸ்வரி அம்மன், காந்தி மெயின் ரோடு துா்க்கையம்மன் மற்றும் திருத்தணி வன துா்க்கையம்மன் ஆகிய கோயில்களில், புதன்கிழமை, மகாளய அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பகல், 12 மணிக்கு, மூலவா் அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மாலை, 5 மணி முதல், மாலை, 6 மணி வரை நடந்த சிறப்பு பூஜையில், திரளான பெண்கள் பங்கேற்று வழிபட்டனா்.

X
Dinamani
www.dinamani.com