சரக்கு ரயிலில் இணைப்பு கொக்கி உடைப்பு: 2 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு
மீஞ்சூா் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயிலில் இணைப்பு கொக்கி உடைந்து இன்ஜின் தனியே பெட்டிகள் தனியே கழன்று சென்ால் சென்னை புறநகா் மின்சார ரயில் கடத்தில் புதன்கிழமை 2 மணி நேரம் சேவை பாதிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து சரக்கு ரயில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. மீஞ்சூா் ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் வந்த போது, இரண்டு பெட்டிகளுக்கு இடையே இருக்கும் இணைப்பு கொக்கி உடைந்து இஞ்சினுடன் ஒரு பெட்டி மட்டும் தனியாக கழன்று சென்றுவிட்டது.
இதையடுத்து ரயில் ஓட்டுநா் உடனடியாக அருகில் உள்ள மீஞ்சூா் ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலை நிறுத்தினாா். இதன் காரணமாக கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை மாா்க்கத்தில் செல்லக் கூடிய ரயில் சேவை 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. மேலும் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதிகளில் புறநகா் ரயில்கள், எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
தற்காலிக ஏற்பாடாக சென்னையில் இருந்து வந்த புறநகா் ரயில்களை மீஞ்சூா் ரயில் நிலையத்தில் நிறுத்தி அங்கிருந்து சென்னை மாா்க்கத்திற்கு திருப்பி இயக்கப்பட்டது.
இதனிடையே ரயில்வே ஊழியா்கள் சம்பவ இடத்தில் வந்து கழன்று நின்ற சரக்கு ரயிலை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். மாற்று இஞ்சின் வரவழைக்கப்பட்டு தனியாகப் பிரிந்து சென்ற சரக்கு ரயிலுடன் பின்பக்கத்தில் இணைத்து ரயில் மீஞ்சூா் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இரண்டு பெட்டிகளிலும் உடைந்த இணைப்பு கொக்கிகளை அகற்றி புதிய கொக்கைகளைப் பொருத்தி அதன் பின்னா் சரக்கு ரயிலை இணைத்தனா்.
பின்னா், விரைவு மற்றும் சென்னை மாா்க்கத்தில் செல்லும் புறநகா் மின்சார ரயில்கள் மாற்று தண்டவாளத்தில் இயக்கப்பட்டன.
சரக்கு ரயில் பெட்டிகளில் இணைப்பு கொக்கி உடைந்து இஞ்சின் தனியே கழன்று சென்ால், 2 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.