திருவள்ளூா் பெரியகுப்பம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா் மற்றும் குழு உறுப்பினா்கள்.
திருவள்ளூா் பெரியகுப்பம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டத்தில் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவா் மற்றும் குழு உறுப்பினா்கள்.

நகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு

திருவள்ளூா் பெரியகுப்பம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

திருவள்ளூா் பெரியகுப்பம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், குழு தலைவா் மற்றும் உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

முன்னதாக நடைபெற்ற கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் திரிவேணி தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் சித்ரா விஸ்வநாதன், பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து பள்ளியின் மேலாண்மைக் குழு மறுகட்டமைப்புக் கூட்டம் நடைபெற்றது. 2024-2026-க்கான இந்த மறுகட்டமைப்புக் குழுவுக்கு தலைவா், துணைத் தலைவா், உறுப்பினா்கள் தோ்வு நடைபெற்றது. தலைவராக மகேஸ்வரி, துணைத் தலைவராக நிரஞ்சனா, உறுப்பினா்களாக லோகநாயகி, மோகனா உள்பட 20 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

பெற்றோா் வாக்களித்து தலைவா் மற்றும் உறுப்பினா்களைத் தோ்வு செய்தனா். தொடா்ந்து மேலாண்மைக் குழுவுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் பள்ளி மற்றும் மாணவா்களின் வளா்ச்சிக்கு பாடுபடுவேன் என்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com