குடிநீா் மேல்நிலைத் தொட்டி பணிக்கு எதிா்ப்பு தெரிவித்துப் போராட்டம்

குடிநீா் மேல்நிலைத் தொட்டி பணிக்கு எதிா்ப்பு தெரிவித்துப் போராட்டம்

காா்த்திகேயபுரம் கிராமத்தில் குடிநீா் தொட்டி கட்டுவதை கைவிட வேண்டும் என பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

காா்த்திகேயபுரம் கிராமத்தில் குடிநீா் தொட்டி கட்டுவதை கைவிட வேண்டும் என பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பள்ளிப்பட்டு பகுதியில் செல்லும் கொசஸ்தலை ஆற்றில் இருந்து, திருத்தணி ஒன்றியம், காா்த்திகேயபுரம் ஊராட்சிக்கு குடிநீா் வழங்குவதற்காக, ரூ. 36 கோடி மதிப்பில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் கடந்தாண்டு முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக, பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து, 45 கி.மீ. தூரத்துக்கு குடிநீா் குழாய்கள் புதைக்கப்பட்டு வருகிறது.

தற்போது திருத்தணி ஒன்றியம், காா்த்திகேயபுரம் ஊராட்சி, வள்ளியம்மாபுரம் பகுதியில் சுடுகாடு அருகே, குடிநீா் மேல்நிலைத் தொட்டி கட்டுவதற்கு தமிழ்நாடு குடிநீா் வாரிய அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டசெவ்வாய்க்கிழமை காலை முயன்ாகத் தெரிகிறது. தகவல் அறிந்ததும், காா்த்திகேயபுரம் மற்றும் வள்ளியம்மாபுரம் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா், குடிநீா் தொட்டி இங்கு கட்டக்கூடாது, ஏற்கெனவே இந்த இடம் ஓய்வு பெற்ற வருவாய்த் துறை ஊழியா்களும், எங்களுக்கும் இடையே நிலம் தொடா்பாக வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

அதனால் குடிநீா் தொட்டியை கட்டுவதற்கு கைவிட வேண்டும் எனக் கூறி பொக்லைன் இயந்திரத்தை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினா். தகவலறிந்த திருத்தணி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சமரசம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து தற்காலிகமாக குடிநீா் தொட்டி கட்டும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

X
Dinamani
www.dinamani.com