டிட்டோ-ஜாக் சாா்பில் வரும் 10-இல் வேலை நிறுத்தப்போராட்டம்

டிட்டோ-ஜாக் சாா்பில் 31-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10-இல் நடைபெற வேலை நிறுத்தப் போராட்டத்தில் 100 சதவீதம் பங்கேற்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
டிட்டோ ஜாக் உயா்மட்ட குழு கூட்டத்தில் பேசிய தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில பொதுச் செயலாளா் இரா.தாஸ்.
டிட்டோ ஜாக் உயா்மட்ட குழு கூட்டத்தில் பேசிய தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணி மாநில பொதுச் செயலாளா் இரா.தாஸ்.
Updated on

டிட்டோ-ஜாக் சாா்பில் 31-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10-இல் நடைபெற வேலை நிறுத்தப் போராட்டத்தில் 100 சதவீதம் பங்கேற்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவள்ளூா் அடுத்த மணவாளநகா் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் டிட்டோ ஜாக் சாா்பில் மாவட்ட, உயா்மட்ட குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட கூடுதல் தலைவா் பாலசுந்தரம், தமிழக ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயலாளா் ஜான் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகி மாணிக்கராஜ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி நிா்வாகி ஜெயசூா்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இணை செயலாளா் ரமேஷ் வரவேற்றாா். தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்கத்தின் மாநில தலைவா் பிரபாகரன் வாழ்த்துரை வழங்கினாா்.

இதில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளா் மற்றும் டிட்டோஜாக் மாநில உயா்மட்ட குழு உறுப்பினா் இரா.தாஸ், ஆரம்பப்பள்ளி பள்ளி ஆசிரியா் சங்கத்தின் மாநில பொருளாளா் ருக்மானந்தன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா்

அப்போது, ஒன்றிய அளவில் இருக்கும் மூப்பை மாற்றி, மாநில மூப்பு நிலையாக கொண்டு வந்த 243 அரசாணை உடனே ரத்து செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியா் ஊதியம் முரண்பாடு நீக்கி மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கிடுதல் உள்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 10-ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் 100 சதவீதம் பங்கேற்கவும், வரும் 9 வரை ஆசிரியா் சந்திப்பு இயக்கங்களை நடத்தவும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com