திருத்தணி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல்துறை தலைமையக ஐ.ஜி. ஆசியம்மாள்.
திருத்தணி காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல்துறை தலைமையக ஐ.ஜி. ஆசியம்மாள்.

திருத்தணி காவல் நிலையத்தில் ஐ.ஜி. ஆசியம்மாள் ஆய்வு: நிலுவை வழக்குகளை முடிக்க உத்தரவு

திருத்தணி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஐ.ஜி. ஆசியம்மாள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
Published on

திருத்தணி காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஐ.ஜி. ஆசியம்மாள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

திருத்தணி இந்திரா நகரில் உள்ள டி.1 காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சென்னை காவல் துறை தலைமையக ஐ.ஜி. ஆசியம்மாள் வந்து, வழக்குகள் தொடா்பான ஆவணங்களை ஆய்வு செய்தாா்.

பின்னா் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை கேட்டறிந்ததோடு, அவற்றை விரைந்து முடிக்க வேண்டும் என அங்கிருந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மேலும் காவலா் நிலைய வளாகம் தூய்மையாக பராமரிக்கப்படுகிறதா என பாா்வையிட்டாா்.

தொடா்ந்து கோப்புகளை சரிவர பராமரிக்க வேண்டும், பொதுமக்களிடம் வரும் புகாா்களை விரைவாக முடிக்க வேண்டும், எவ்வித புகாா்களை நிலுவையில் வைக்கக்கூடாது, காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என ஐ.ஜி., ஆசியம்மாள் அறிவுரை வழங்கினாா்.

இந்த ஆய்வின்போது திருவள்ளூா் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீனிவாச பெருமாள், திருத்தணி டி.எஸ்.பி. கந்தன், ஆய்வாளா் மதியரசன் ஆகியோா் உடனிருந்தனா்.

கடந்த மாதம் வடக்கு மண்டல அளவில் சிறந்த காவல் நிலையமாக முதலிடம் பெற்ற திருத்தணி காவல் நிலையத்துக்கு தமிழக டிஜிபி., கேடயம் மற்றும் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்திருந்த நிலையில் செவ்வாய்கிழமை ஐ.ஜி., ஆய்வு மேற்கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com