பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கிய எம்எல்ஏ  ச.சந்திரன்.
பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கிய எம்எல்ஏ ச.சந்திரன்.

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 147 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 147 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை எம்எல்ஏ ச.சந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.
Published on

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 147 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை எம்எல்ஏ ச.சந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.

திருத்தணி ஒன்றியத்தில் உள்ள 27 ஊராட்சிகளில் குடிசை வீடுகளில் வசிப்போா் மற்றும் வீடுகள் இல்லாதவா்கள் குறித்து ஒன்றிய நிா்வாகம், கணக்கெடுத்து மொத்தம், 1,618 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டிருந்தனா்.

முதல்கட்டமாக, 147 பயனாளிகளுக்கு கான்கிரீட் தளம்போட்ட வீடுகள் கட்டுவதற்கு தலா, 3.50 லட்சம் ரூபாய் வழங்கப்படவுள்ளது. பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி தலைமை வகித்தாா். கிராம ஊராட்சி வட்டார வளா்ச்சி அலுவலா் சந்தானம் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக திருத்தணி எம்எல்ஏ ச. சந்திரன் கலந்துக் கொண்டு, 147 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினா். மேலும் 6 மாதத்துக்குள் வீடுகளை கட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா். நிகழ்ச்சியில், ஒன்றிய உறுப்பினா்கள் ஆா்த்தி ரவி, கிருஷ்ணன், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com