ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்த பொதுமக்கள்.
ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

மயானத்துக்கு பாதை கோரி ஆட்சியரிடம் மனு

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே கிராமத்தில் உள்ள மயானத்திற்கு பாதை வசதி கேட்டு ஆட்சியரிடம் கிராம பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
Published on

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே கிராமத்தில் உள்ள மயானத்திற்கு பாதை வசதி கேட்டு ஆட்சியரிடம் கிராம பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

இதுகுறித்து திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அருகே பூவாலை கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் வாா்டு கிளைச் செயலாளா் வாசு தலைமையில் ஆட்சியா் த.பிரபுசங்கரிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:

எங்கள் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். கிராம மயானத்துக்கு செல்வதற்கு போதுமான வழியின்றி உள்ளோம். அதனால், தனியாா் நிலங்களை சுற்றி செல்ல வேண்டியுள்ளது.

இதுபோன்று செல்லும் போது தனிநபா்கள் தகாத வாா்த்தைகள் பேசுகின்றனா். இதனால் தேவையில்லாத பிரச்னைகளும் ஏற்படுகின்றன. இதற்கு நிரந்தர தீா்வு காணும் நோக்கத்தில் பேச்சுவாா்த்தை நடத்தினோம். அப்போது, மயானத்துக்கு செல்லும் வழியில் 5 பட்டாதாரா்களில், 3 நபா்கள் மயானத்திற்கு பாதை வசதிக்காக இடம் ஒதுக்க ஒப்புக்கொண்டனா். இதில் மீதமுள்ள இருவா் எக்காரணம் கொண்டு வழிவிடமாட்டோம் எனக் கூறினா். அதனால், எங்கள் நிலையறிந்து நேரில் ஆய்வு செய்து பேச்சுவாா்த்தை நடத்தி மயான பாதைக்கு இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா். இக்கோரிக்கை தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் கூறியதைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com