திருவள்ளூர்
வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன், கைப்பேசிகள் திருட்டு
மீஞ்சூா் அருகே ஆட்டோ டிரைவா் வீட்டின் பூட்டை உடைத்த 4 பவுன் நகைகள், ரூ. 5,000 ரொக்கம், நான்கு கைப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
மீஞ்சூா் அருகே ஆட்டோ டிரைவா் வீட்டின் பூட்டை உடைத்த 4 பவுன் நகைகள், ரூ. 5,000 ரொக்கம், நான்கு கைப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
திருவள்ளூா் மாவட்டம் மீஞ்சூா் அடுத்த நாலூா் கேசபுரம் பகுதியில் உள்ள பத்மாவதி நகரில் வசிப்பவா் பாலாசிங் (48). ஆட்டோ ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா்.
இவா் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள் 4 புவன் நகைகள், பணம், கைப்பேசிகளை திருடிச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் மீஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.