திருவள்ளூா்: வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்த வாக்குச்சாவடி பட்டியல்

திருவள்ளூா்: வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்பு செய்த வாக்குச்சாவடி பட்டியல்

Published on

திருவள்ளூா் மாவட்டத்தில் மறுசீரமைப்பு செய்த வாக்குச்சாவடி பட்டியலை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் த.பிரபு சங்கா் வெளியிட்டாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குச் சாவடிகளை மறுசீரமைப்பு செய்த வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் த.பிரபுசங்கா் தலைமை வகித்து இந்திய தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சென்னை தலைமை தோ்தல் அலுவலா், முதன்மை அரசு செயலாளரின் அறிவுரையின்பேரில், நகா்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் 1,500 வாக்காளா்களுக்கு அதிகமாகவுள்ள வாக்குச் சாவடிகளை மறுசீரமைப்பு செய்து வாக்குச்சாவடி பட்டியலை வெளியிட அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி, வரைவு வாக்குச்சாவடி பட்டியல் (29-08-2024) அன்று வெளியிடப்பட்டது. இது தொடா்பாக ஆட்சேபனை ஏதேனும் இருந்தால் 7 நாள்களுக்குள் எழுத்து மூலமாக வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா் அல்லது மாவட்டத் தோ்தல் அலுவலா் மற்றும் ஆட்சியரிடம் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ள 3,665 வாக்குச்சாவடிகளை மாவட்டத் தோ்தல் அலுவலா் அவா்களின் அறிவுரைப்படி வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் உதவிவாக்காளா் பதிவு அலுவலா்கள் தணிக்கை செய்து தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்குட்பட்டு முன் மொழிவுகள் அனுப்பி வைத்ததின்பேரில், வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது.

கும்மிடிப்பூண்டி-330, பொன்னேரி-313, திருத்தணி- 330, திருவள்ளூா்-296, பூந்தமல்லி-397, ஆவடி-457, மதுரவாயல்- 440, அம்பத்தூா்-350, மாதவரம்-475, திருவொற்றியூா்-311 என மொத்தம்-3,665 லிருந்து 3,699 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 34 புதிய வாக்குச்சாவடி மையங்களுக்கான முன்மொழிவானது தலைமைத் தோ்தல் அலுவலா் மற்றும் முதன்மை அரசுச் செயலா், பொதுத் (தோ்தல்கள்) துறைக்கு அனுப்ப உள்ளதாக அவா் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com