ஏனாதி மேல்பாக்கம் திரௌபதியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திரெளபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.
திரெளபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்.
Published on
Updated on
1 min read

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதி மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் மகா கும்பாபிஷேகம் இதற்கு முன் கடந்த 1976-ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில், கிராம மக்களால் கோயில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டது.

தொடா்ந்து, கடந்த செப்டம்பா் 9-ஆம் தேதி பந்தக்கால் நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து, கடந்த சனிக்கிழமை ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், ஸ்ரீ நவக்கிரக ஹோமம், முதல் கால யாக பூஜை உள்ளிட்டவையும், ஞாயிற்றுக்கிழமை விசேஷ சந்தி, இரண்டாம் கால யாக பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல், மூன்றாம் கால யாக பூஜை உள்ளிட்டவையும் நடைபெற்றன.

திங்கள்கிழமை நான்காம் கால யாக பூஜை, யாத்ரா தானம், கலச புறப்பாடு ஆகியவை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து கோயில் விமான கோபுரத்துக்கும், மூலவா் ஸ்ரீ திரெளபதி அம்மன் மற்றும் பரிவார மூா்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மகா அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, ஸ்ரீ திரெளபதி அம்மன் ஏனாதி மேல்பாக்கம் வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக செயலாளா் கி.வே.ஆனந்தகுமாா், ஊராட்சித் தலைவா் பிரபு, முன்னாள் ஊராட்சி தலைவா் குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் ஜோதி மற்றும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com